இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளிட்ட பல பிரிவினருக்கு இந்தியா விசா மற்றும் கடவுச்சீட்டு விதிகளில் தளர்வு!

user 06-Nov-2026 இந்தியா 11 Views

இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் தளர்வுகளை இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த பாகிஸ்தான் குடிமக்கள், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அயல் நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர், இலங்கைத் தமிழ் அகதிகள் மற்றும் திபெத்தியர்களுக்கு இந்தச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

இந்தத் திருத்தங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விசா மற்றும் பயண விதிகளில் மாற்றம்

இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கிடையே பயணிக்கும் குடிமக்களுக்கான அடையாள ஆவணங்கள் மற்றும் பயண நடைமுறைகளும் இதன்மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்று அடைக்கலம் புகுந்து, அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் பொதுவான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினரின் பயண மற்றும் குடியிருப்பு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை