கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்

user 06-Apr-2024 இலங்கை 7 Views

இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய இனந்தெரியாத ஹேக்கர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (SLCERT) மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆகியவை இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இதனிடையே, பயனர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு கல்வி அமைச்சு கவலை தெரிவித்ததுடன், உத்தியோகபூர்வ இணையத்தளத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த சைபர் தாக்குதல்  “அனோனிமஸ் EEE” என்ற ஹேக்கர்கள் குழு  இணையளத்தளத்திலுள்ள பாதுகாப்பு குறைப்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன், அத்துமீறி உள்நுழைந்தமைக்கு மன்னிப்புக் கோரி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை