இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன அமைச்சர்

user 24-Apr-2024 இலங்கை 6 Views

சீன பொதுவுடைமைக் கட்சியின் சர்வதேச பிரிவு பிரதிநதியும் அமைச்சருமான ஷன் ஹயன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை (2024.04.23) இலங்கை வந்துள்ளார்.

நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அமைச்சர் ஷன் ஹயன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய குழுவினரையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இணைந்து பணியாற்றுதல் தொடர்பிலேயே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

 

இதேநேரம் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்கள் உள்ளிட்டவை பற்றியும் அவதானம் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை