Roller netted ball- 2024: வெற்றி மகுடம் சூடிய இலங்கை

user 20-May-2024 இலங்கை 4 Views

சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்’ (Roller netted ball) விளையாட்டின் 2024 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்கு பற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

 

இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பற்றிய இலங்கை அணி. ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டிருந்தது.

இதில் இலங்கை அணி சார்பாக பங்கு கொண்ட மன்னார் மாவட்ட வீரர்களான மாணவர் மாணவிகளுக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று இடம் பெற்றது.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் சந்தியோகு, மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எம். பயஸ், இலங்கை ரோல் போல் சம்மேளனத்தின் செயலாளர் தபேந்திரன், மன்னார் மாவட்ட ரோல் போல் சம்மேளன தலைவர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

ரோல் போல் விளையாட்டானது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் முதலாக மன்னார் மாவட்டத்தில் விளையாட்டு குழு ஆரம்பிக்கப்பட்டதாகவும், மன்னார் மாவட்ட விளையாட்டு வீரர்கள் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சிறப்பாக விளையாடி வருவதாகவும் இலங்கை ரோல் போல் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை