முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுடன் சஜித் விசேட சந்திப்பு

user 01-May-2024 இலங்கை 4 Views

முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வீட்டில் வைத்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக  கூறப்படுகிறது.

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள  இலங்கை மற்றும் மாலைதீவுக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தனது இல்லத்தில் பிரியாவிடை இராபோசன விருந்துபசாரமளித்துள்ளார்.

இந்த விருந்துபசாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பஹீமுல் அஸீஸ், இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் தாரிக் எம் டி அரிபுல் இஸ்லாம், இலங்கையிலுள்ள பலஸ்தீன தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம்.எச்.டார் செயிட், இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர், இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கலாநிதி ஹர்ச டி. சில்வாவுக்கும் குறித்த நிகழ்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

சஜித் பிரேமதாச பங்கேற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களுடன் நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

மேலும், சஜித் பிரேமதாச, தனது தலைமையில் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதும் அது பலஸ்தீன சார்புடையதாக அமையுமென்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை