பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் சிம்பு.. யார் அந்த நடிகை தெரியுமா !

user 21-May-2024 பொழுதுபோக்கு

நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சிம்புவின் புகைப்படம் மற்றும் அறிவிப்பு வீடியோ வெளிவந்தது. அதே போல் சிம்புவின் கைவசம் STR 48 திரைப்படமும் உருவாகவுள்ளது. இப்படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்போகிறார் என்றும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை