கனடாவை விட்டு திடீரென வெளியேறிய சீன தூதுவர்

user 22-Apr-2024 உலகம் 260 Views

கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றதைத் தொடர்ந்து, கனடாவுக்கான சீன தூதுவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு முதல் கனடாவுக்கான சீன தூதராக பணியாற்றிவந்த Cong Peiwu தற்போது, திடீரென கனடாவை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில்தான் கனடாவின் துணை வெளியுறவு அமைச்சரான David Morrison சீனா சென்று சீனாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சரான Ma Zhaoxuவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார்.

இந்நிலையில், திடீரென கனடாவுக்கான சீன தூதர் கனடாவை விட்டு வெளியேறியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதன்படி 2018ஆம் ஆண்டு, கனேடிய பாதுகாப்பு படையினர் சீன தொலைக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை நிதி அலுவலரான Meng Wanzhouவைக் கைது செய்தது.

மேலும். அந்த சம்பவங்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டமை குறிபிடத்தக்கது.

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை