தமிழக தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த அண்ணாமலை உட்பட முக்கிய பிரபலங்கள் !

user 04-Jun-2024 இந்தியா

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.கவின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகிக்கும் அதேவேளை, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை (Annamalai) கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  

குறித்த தொகுதியில், 33997 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றுவரும் நிலையில், தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 26741 வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04.06.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. பின்பு, சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் கவனத்தை ஈர்த்த வேட்பாளர்கள் மதியம் 1 மணி வரை பெற்ற வாக்குகள் விவரம் பின்வருமாறு,

கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 62, 486 வாக்குகளை பெற்றுள்ளார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 41,156 வாக்குகளை பெற்றுள்ளார்.

வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மன்சூர் அலிகான் 618 வாக்குகளை பெற்றுள்ளார்.

கடலூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்ட தங்கர் பச்சான் 95,261 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார்.

கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வீரப்பனின் மகள் வித்யா ராணி 18,717 வாக்குகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார்.

மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட காளியம்மாள் 58,545 வாக்குகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார்.

 

விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 55,370 வாக்குகளை பெற்றுள்ளார்.

விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிட்ட விஜயபிரபாகரன் 1,43,490 வாக்குகளை பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 73,644 வாக்குகளை பெற்றுள்ளார்.

பெரம்பலூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட பாரிவேந்தர் 65,744 வாக்குகளை பெற்றுள்ளார்.

தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டி.டி.வி. தினகரன் 60,757 வாக்குகளை பெற்றுள்ளார்.   

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை