கனடாவில் குளிர்பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுப்பிடிப்பு

user 14-Aug-2024 உலகம் 4 Views

கனடாவில்(Canada) பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அந்த பானத்தை அருந்திய 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ(Ontario), கியூபெக், ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கொஷியா ஆகிய நான்கு மாகாணங்களில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

ஒன்ராறியோவிலுள்ள Pickering என்னும் நகரில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட பானத்தில் இந்த கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

 

Silk என்னு பிராண்ட் பெயர் கொண்ட almond milk, coconut milk, almond-coconut milk and oat milk மற்றும் Great Value பிராண்டின் almond milk ஆகிய பானங்களே இந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே, இந்த பானத்தை அருந்திய 2 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை