தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்!

user 05-Jun-2024 இலங்கை 5 Views

அரசாங்கத்தினால் தங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படாத நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை 34 நாட்களை கடந்து நீடித்து வருகின்றது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தில் 15 வீத வெட் வரி அறவிடப்படுவது மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்களும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கற்றல் நடவடிக்கைகளும் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக, உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணைக்கப்பாடின்றி நிறைவடைந்ததாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவின் இணை தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதனால், அரசாங்கத்தினால் தங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படாத நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை