கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த காவலர் பணி இடைநீக்கம்!

user 07-Jun-2024 பொழுதுபோக்கு

இந்திய சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத்தின்(Kangana Ranaut) கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கை மேலும் விசாரிக்க சி.ஐ.எஸ்.எஃப்(CISF) அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கங்கனா ரனாவத் டெல்லி(Delhi) வரவிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து காணொளி வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், தான் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க உறுப்பினர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர் விமான நிலையத்துக்கு இன்று (6)நடிகை கங்கனா ரணாவத்(Kangana Ranaut) வருகை தந்திருந்த நிலையில், அங்கிருந்த துணை இராணுவமான மத்திய தொழில் பாதுகாப்பு (CISF) பெண் வீரர் ஒருவருக்கும், நடிகை கங்கனாவிற்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் நடிகையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அந்த வீரர் அறைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் விமான நிலையத்தில் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில், நம்பத் தகுந்த வட்டாரங்கள் இந்த தகவலை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

கங்கனா ரனாவத் – துணை ராணுவ வீரர் இடையிலான மோதல் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் கங்கனா ரனாவத் தரப்பினர் இதுபற்றி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தன்னை பெண் சி.ஐ.எஸ்.எஃப். காவலர் தாக்கியதாக கங்கனா ரணாவத் காணொளி பதிவில் கூறியுள்ளார்.

பெண் காவலர் தன்னை தாக்கி, தகாத வார்த்தையால் பேசியதாக கூறியுள்ள கங்கனா ரனாவத், இதற்கான காரணத்தை கேட்டபோது, அவர் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என பதில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பஞ்சாபில் இத்தகைய தீவிரவாத போக்கு அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகவும் கங்கனா ரணாவத் கூறியுள்ளார் இதற்கிடையே கங்கனா ரனாவத்தை தாக்கியது சிஐஎஸ்எஃப் துணை ராணுவத்தை சேர்ந்த குல்விந்தர் கவுர் என தெரியவந்துள்ளது.

பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா ரணாவத் கூறியதால் அவரை குல்விந்தர் கவுர் தாக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை