போக்கிலி’.. ‘போக்கிலி’ என்று ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்ட சுமந்திரனும் மாவையும்!

user 18-Jun-2024 இலங்கை 11 Views

தமிழரசுக் கட்சி கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனும் மாவை சேனாதிராஜாவும் ஒருவரை மாறி ஒருவர் ‘போக்கிலி’ ‘போக்கிலி’ என்று ‘பாராட்டிக்கொண்ட’ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கின்ற அந்தச் சம்பவம் பற்றி குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஒருவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தமிழரசுகட்சி மத்தியகுழுக்கூட்டம் கடந்த (16.06.2024) வவுனியாவில் உள்ள தனியார் இல்லமொன்றில் மாவை சேனாதிராஜா தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.

அந்த கூட்டத்தில் சுமந்திரன், ஶ்ரீதரன் போன்றோரும், இருவருடைய ஆதரவாளர்களும், நடுநிலையான சில உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

கூட்டம் ஆரம்பமான போதே ஏட்டிக்குப்போட்டியாக வார்தைப் பிரயோகங்கள் தாராளமாய் அரங்கேறின.

மாவை தனது தலைமை உரையில், “சுமந்திரன் என்னை பற்றி பச்சைப்பொய் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கடந்த ஜனவரி 21இல் நடந்த தமிழரசுகட்சி தலைவர் தெரிவில் பொதுச்சபையில் மேலதிகமாக 20 பேர் வாக்களிக்க சம்மதிக்காவிடில் தாம் தலைவர் தெரிவு தேர்தலை நடத்த விடமாட்டேன் என்று நான் சொன்னதாக அப்பட்டமான பச்சைப்பொய்யை சுமந்திரன் கூறியுள்ளார்.

அது மட்டுமன்றி நீதிமன்றிலும் எழுத்துமூலமாக அதை கொடுத்திருக்கார். நான் அவ்வாறு கூறாதவற்றை ஏன் இப்படி சோடித்துச் செய்தார்?''என்று உரத்த குரலில் மாவையர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை