இயக்குநர் ஷங்கரிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: !

user 24-Jun-2024 பொழுதுபோக்கு 11 Views

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘இந்தியன் 2’, ஜூலை 12-ம் தேதி வெளியாகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்தபோது, இயக்குநர் ஷங்கரிடம் இருந்து அதிகம் கற்றுக்கொண்டதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஜாம்பவனாக இருக்கும் இயக்குநர் ஷங்கருடன் பணிபுரிய கிடைத்த வாய்ப்பை தனி சலுகையாக கருதுகிறேன். அவர் அற்புதமான இயக்குநர். கதாபாத்திரங்களை அவர் பார்க்கும் விதம், அவரது நோக்கம், படப்பிடிப்பு தளத்தில் நுணுக்கங்களை அவர் சேர்க்கும் விதம் என அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். ‘இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளம் உண்மையிலேயே சிறந்த அனுபவத்தை கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை