நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் !

user 01-Jul-2024 இலங்கை 9 Views

இளைஞன் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெமட்டகொடையில் கடையொன்றில் பணிபுரிந்து வந்த இளைஞரை கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த குற்றச்சாட்டில் ஹிருணிகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் அமில பிரியங்கர இது தொடர்பில் கூறுகையில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்ற அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது என்பதை ஹிருணிகா பிரேமச்சந்திர இப்போது புரிந்து கொள்வார். "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீதிமன்ற வழக்கு ஒன்பது ஆண்டுகளாக இழுத்துச் செல்லப்பட்டது.

அந்த நேரத்தில் என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை. நான் நான்கு முறை வேலையை மாற்ற வேண்டியிருந்தது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், அது எனக்கு ஓரளவு நிவாரணமாக இருந்திருக்கும். 

இச்சம்பவத்தினால் தனது மகன் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்தாலும், தவறு செய்வதற்கு முன், நாட்டில் சட்டம் உள்ளது என்பதை மக்களுக்கு நினைவூட்ட, இந்த தீர்ப்பு ஒரு சிறந்த உதாரணம்.

“இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஹிருணிகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் தனக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை