Sunday, September 15, 2024
பாகிஸ்தானில் (Pakistan) சவுதி ஏர்லைன்ஸ் விமானமொன்று தரையிறக்கத்தின்போது தீப்பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விமானமானது பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் நேற்று (11) தரையிறங்கும் போது தீப்பிடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 297 பயணிகளுடன் ரியாத்தில் இருந்து பெஷாவர் வந்தடைந்த இந்த விமானமானது தரையிறங்கும் கருவியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, கருவியின் உள்ளே தீப்பிடித்ததால், டயரில் இருந்து புகை கிளம்பியது.
இதற்கிடையில், இதை கவனித்த ஊழியர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதன்போது உடனடியாக விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு, அவசர கதவு வழியாக பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர்.
விமானத்தில் இருந்த 276 பயணிகளும் 21 பணியாளர்களும் காயமின்றி உயிர் தப்பிதோடு, தீயணைப்பு படையினர் விமானத்திற்கு வந்து புகையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை சவுதி ஏர்லைன்ஸ் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.