உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியேறும் மக்கள் !

user 29-Jul-2024 உலகம் 10 Views

கடந்த 4 நாட்களில் மட்டும் காசாவின் (Gaza) கான் யூனிஸ் (Khan Yunis) நகரத்தில் இருந்து 1.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் போர் காரணமாக மக்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, குறித்த போர் காரணமாக 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதம் என்பதுடன், 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், இதுவரையில் மொத்தமாக 23 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை