ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ தளபதி பலி !

user 31-Jul-2024 உலகம் 26 Views

கோலான்குன்று பகுதியில் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ தளபதி கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை மாலை நடத்தப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் மிக மூத்த இராணுவத் தளபதியும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லாவின்(Hassan Nasrallah) வலது கரமுமான ஃபுவாட் ஷுக்ர்,(Fuad Shukr)என்பவரே கொல்லப்பட்டவராவார்.

பெய்ரூட்டின் தெற்கே புறநகர்ப் பகுதியும் ஹிஸ்புல்லாவின் கோட்டையுமான தாஹியில் செவ்வாய்க்கிழமை இரவு 7:40 மணியளவில் தாக்குதல் நடந்தது.பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து புகை மூட்டம் அக்கம் பக்கத்தில் எழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஹிஸ்புல்லாவின் துல்லியமான ஏவுகணைத் திட்டத்தின் தளபதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் இராணுவத்தால் பெயரிடப்பட்டார். 1983 ஆம் ஆண்டு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க மரைன் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அவர் அமெரிக்காவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். வோஷிங்டனால் அவரது தலைக்கு $5 மில்லியன் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மூத்த இராணுவ ஆலோசகராகவும், அவருடைய "வலது கரமாக" பணியாற்றுவதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை