பொலிஸ் மா அதிபரது பிரச்சினை மத்தியிலும் தேர்தல் கடமைகளில் பொலிஸார்

user 01-Aug-2024 இலங்கை 11 Views

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் அதிகாரிகளை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குணதிலக்க மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் அதிகாரிகளை ஒருங்கிணைக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க பேச்சுவார்த்தைக்காக தேர்தல் செயலகத்துக்கு நேற்று சென்றிருந்தார்.

இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல்களின்போது பொலிஸாரை கடமைகளில ஈடுபடுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு, ஜனாதிபதி விசேட அனுமதியை வழங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை