Sunday, September 15, 2024
இந்தியா-கேரளாவில் மூளையை உண்ணும் பக்டீரியாவான அமீபா காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி திருவனந்தபுரம் கன்னரவிளையைச் சேர்ந்த நபரொருவர் அமீபா மூளைக் காய்ச்சலினால் உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்கள் நான்கு பேருக்கும் மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.