இஸ்ரேலியர்கள் தொடர்பில் மாலைத்தீவு எடுத்துள்ள முக்கிய தீர்மானம் !

user 03-Jun-2024 இலங்கை 7 Views

மாலைத்தீவு அரசாங்கம் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடைசெய்யும் வகையில் நாட்டின் சட்டங்களை மாற்றுவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அலி இஹுசன் (Ali Ihusaan) இந்த முடிவை அறிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் கடவுச்சீட்டில் மாலைத்தீவிற்குள் நுழைவதைத் தடைசெய்ய தேவையான சட்டத் திருத்தங்களை விரைவில் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் மாலைத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 11,000 இஸ்ரேலியர்கள் மாலைத்தீவுக்கு பயணம் செய்துள்ளனர். இது மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 0.6% ஆகும்.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாலைத்தீவுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவில் முஸ்லிம் மக்கள் தொகையே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை