10 இலட்சம் இளைய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானம் !

user 20-Mar-2024 அரசியல் 3 Views

உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் ழுழுமையான உரிமையுடன் கூடிய விடுவிப்பு கையளிப்புப் பத்திரத்தை வழங்குவதற்கு குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் ஒரு மில்லியன் இளைய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இளைய தொழில்முயற்சியாளர்கள் பற்றிய தகவல்கள்களைத் திரட்டுவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


தற்போது இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு அவர்கள் அனுபவிக்கின்ற காணிகளுக்காக கையளிப்புப் பத்திரங்கள் அல்லது வழங்கல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டில் குறித்த வழங்கல் பத்திரதாரர்கள் மற்றும் கையளிப்புப் பத்திரதாரர்களுக்கு அரச காணிகளில் அறுதி உரித்தை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த இரண்டு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களை 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் படையணியை ஈடுபடுத்தி அந்தந்த கிராம அலுவர்களின் ஒத்துழைப்புடன் சேகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கிணங்க, பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் காணப்படுகின்ற பொறிமுறையைப் பயன்படுத்தி தேவையான தகவல்களை சேகரித்து 'உரித்து' வேலைத்திட்டம் மற்றும் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதமாக மேற்கொள்வதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை