பறக்கும் படையிடம் சிக்கிய 30 கிலோ தங்கம்

user 07-Apr-2024 இந்தியா 7 Views

இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது.இதில் கட்சிகள் வேட்பாளர்களை கவர இலவசங்களை அள்ளிவீசுவதில் குறியாக உள்ளன.

ஆனால் கட்சிகள் இலவசமாக அள்வீசுவதை பிடிக்க பறக்கும் படையும் கண்ணில் எண்ணெயை விட்டு விழிப்பாக இருக்கிறது.

அந்த வகையில் எவ்வித ஆவணங்களுமின்றி கொண்டு செல்லப்பபட்ட 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை பறக்கும் படை கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (05) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சேவிஸ் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க நகைகளை அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து 69 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் எனவும், தங்க நகைகளின் மொத்த எடை 30 கிலோ எனவும் கூறப்படுகிறது. 

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை