கப்ரால் மீதான இலஞ்ச ஊழல் வழக்கு !

user 31-May-2024 இலங்கை 7 Views

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) மற்றும் ஏனைய நால்வரையும் இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு  கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தீ்ர்ப்பானது, இன்றைய தினம் (31.05.2024) வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2012ஆம் ஆண்டில் திறைசேரி உண்டியல்களை வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைத்த 1,843.3 மில்லியன் பணத்தில் மோசடி செய்ததாக அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஏனைய நால்வரின் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது வழக்கை கையளிக்க முடியாது மற்றும் பராமரிக்க முடியாது என பிரதிவாதிகள் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஏனையோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.

இநநிலையில், முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிகளை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மார்ச் 26ஆம் திகதி அன்று, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் பிரதிவாதியால் கையொப்பமிடப்பட்டபோது, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டதாகவும், அதற்கமைய பழைய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் புதிய குற்றப்பத்திரிகையில் கையொப்பமிடுவது சட்டத்திற்கு முரணானது எனவும் உயர்நீதிமன்ற ஒம்புட்ஸ்மேன் (அரசின் அலுவலர்கள் தவறிழைத்தாலோ, உரிமைகளை மீறினாலோ அதனை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் அதிகாரி) சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாகும் தன்மை சட்டத்தின் பார்வையில் சவால் செய்யப்பட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை பிரதிவாதிகளிடம் ஒப்படைக்க மறுப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து  கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த ஐவரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை