கொக்குதொடுவாய் பகுதியில் காணி அபகரிப்பு?

user 30-Apr-2024 இலங்கை 6 Views

முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

 

முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி, தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள பெரும்பான்மையின மக்கள், அங்குள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான வேறு காணிகளை துப்பரவு செய்து கொண்டிருப்பதாக கிடைக்கபெற்ற தகவலையடுத்தே சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது ”காணி உரிமையாளர்களும் விவசாயிகளும் குறித்த பகுதியை பார்வையிட்டனர். அக்காணிகளை ஏற்கனவே தமக்கு மகாவவலி அபிவிருத்தி அதிகாரசபை 2015ஆம் ஆண்டு தந்திருப்பதாக கூறியே பெரும்பான்மை மக்கள் துப்பரவு செய்கின்றார்கள்.

இதற்குரிய நடவடிக்கைகளை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினரே பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் சென்று பார்த்ததாக தெரியவில்லை. குறித்த இடம் ஏற்கனவே தமிழ்மக்களுக்கு வழங்கப்பட்ட காணி. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக நாம் கலந்துரையாடி முடிவெடுக்க இருக்கின்றோம்” எனத் துரைராசா ரவிகரன் தெரிவித்திருந்தார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை