நாட்டில் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு : மாற்று மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை

user 04-May-2024 இலங்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் அதிகளவு விலைகளில் மாற்று மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாகவே இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிக மருந்து பற்றாக்குறை காணப்படுவதாக நோயாளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

மேலும், தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையிலுள்ள நோயாளிகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள், வயது வந்தோருக்கான சிறுநீரகப் பையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளுக்கு பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் எமோக்ஸ்லின் போன்ற மருந்துகளுக்கே அதிக தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மாற்று மருந்துகளைப் பயன்படுத்த முடியும் எனவும் மருத்துவ சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில மருந்துகளில் 20 முதல் 30 சதவீதம் பற்றாக்குறை காணப்படுவதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை