காசா போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவு !

user 06-May-2024 உலகம் 4 Views

காசா(Gaza) போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல்(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் மற்றும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாததுடன் சமீபத்தில் கெய்ரோவில்(Cairo) நடந்த பேச்சுவார்த்தை நேற்று(05) நிறைவடைந்ததுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தனது குழுவை அனுப்பவில்லை என தெரிவதுடன் இதனால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை(07) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் ரபாவில்(Rafa) இருந்து ஹமாஸ்(Hamas) அமைப்பினர் இஸ்ரேல் நோக்கி உந்துகணைகளை(ரொக்கெட்-Rocket) வீசி தாக்குதல் நடத்தினர்.

கெரெம் ஷாலோம்(Kerem Shalom) எல்லையில் உள்ள இஸ்ரேல் வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 11 வீரர்கள் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் இந்த தாக்குதலைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேல் வீரர்கள் வெளியேற வேண்டும் மற்றும் போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படைகளை திரும்ப பெற்று போரை நிறுத்தினால் ஹமாஸ் படையினர் தங்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியேறி மீண்டும் காசாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவர்களின் இராணுவ கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதாக நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இஸ்ரேல் குடிமக்களை அச்சுறுத்துவதாகவும் இத்தகைய சூழ்நிலையை ஏற்க நாங்கள் தயாராக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை