பெண்களுக்கான திருமண வயதை 9 ஆக குறைக்கும் புதிய சட்டமூலம்

user 09-Aug-2024 உலகம் 17 Views

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. ஆனால் தற்போது முமொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள நிலையில், தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை