சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

user 03-Sep-2024 உலகம் 27 Views

சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் குழந்தைகள் ஆறு வயது நிறைவடைந்தவுடன் அவர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்வது கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் (Saudi Arabia)  பொது குடிவரவு அதிகாரம் (Jawazat) இன்று(2) அதிகாரப்பூர்வ X கணக்கில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக exit அல்லது re-entry visa பெற, இந்த பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Absher என்ற இணையதளத்தினூடாக சென்று புதிய கணக்கொன்றை உருவாக்கி பதிவு செய்தன் பின்னர், குறித்த அலுவலகத்திற்கு செல்லவும்.

உறுதிப்படுத்தப்பட்ட நேரத்தின் அச்சுப் பிரதியோ அல்லது ஸ்க்ரீன்ஷாட்டோடு கடவுச்சீட்டு மற்றும் இகாமாவையும் (புதிய அடையாள அட்டை) கொண்டு செல்லவும்.

குழந்தையின் பயோமெட்ரிக்ஸ் பூர்த்தி செய்ய வேண்டுமென அதிகாரியிடம் தெரிவித்தால், அவர்கள் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு படிவத்தை நிரப்பச் செய்ததன் பின்னர் விரல் ரேகைகளை ஸ்கேன் செய்வார்கள்.

பின்னர், குழந்தையின் விரல் ரேகைகளை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, ஜவாசட் மற்றும் உள்துறை அமைச்சின் (MOI) முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த நிகழ்நிலையில் அதனை சரிப்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை