மீண்டும் தங்க விலையில் மாற்றம்

user 04-Sep-2024 பொருளாதாரம் 22 Views

தங்கத்தின் விலையானது  இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகரித்த தங்க விலையானது இரண்டு நாட்களாக குறைவடைந்த நிலையில் இன்று (04.09.2024) மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 747,529 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,370 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 210,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,180 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 193,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,080 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 184,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 201,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை