என்ன சாப்பிட வேண்டுமென பாஜக எப்படி முடிவு செய்யும்?’

user 22-Apr-2024 இந்தியா 13 Views

மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முன்தினம் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:

ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினார். கோழி முட்டை, இறைச்சியை ஏன் சாப்பிட வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும்.

இட்லி, தோசை மற்றும் பிற மாநிலங்களின் உணவை நீங்கள் சாப்பிடக் கூடாது என நாங்கள் கூற முடியுமா? நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 80% பேர் மாமிசம் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்.

இந்நிலையில், பாஜக ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மாமிச கடைகள் மூடப்படுவதாக கேள்விப்பட்டேன்.

நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு கட்சி, ஒரு நபர் எப்படி முடிவு முடிவு செய்ய முடியும்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை