இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் குதித்த இந்திய கடற்றொழிலாளர்கள்

user 23-Mar-2024 இந்தியா 6 Views

இலங்கைச் சிறையில் உள்ள ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தொடர் வேலை நிறுத்த போராட்டமானது இன்று(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்றொழிலாளர்களை படகுடன் விடுதலை செய்யாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கடற்றொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதன் கிழமை(20) கடற்றொழிலில் ஈடுபட சென்று இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக ஐந்து படகுகளும் அதிலிருந்த 32 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் தேதி கடற்றொழிலில் ஈடுபட சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள விசைப்படகு ஓட்டுநர்கள் ஐந்து பேர் உட்பட 37 கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும் வரும் எட்டாம் திகதி ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடற்றொழிலாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வரும் மக்களவைத் தேர்தலுக்குள் கடற்றொழிலாளர்கள் படகுடன் விடுதலை செய்யப்படாவிட்டால் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்தில் சுமார் 800 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்றொழிலில் ஈடுபட கடலுக்கு செல்லாமல் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10,000 கடற்றொழிலாளர்கள் நேரடியாகவும் 50,000 கடற்றொழில் சார்ந்த தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை