தோனியின் சாதனையை முறியடித்த சிஸ்கே வீரர்

user 06-May-2024 பொழுதுபோக்கு 12 Views

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதை பெற்ற தோனியின் சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் நேற்றையதினம்(6) சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings )மற்றும் பஞ்சாப் கிங்ஸ்(Punjab Kings) அணிகளுக்கிடையிலான போட்டி தரம்சாலாவில் இடம்பெற்றது.

நாணயசுழற்சியில், வெற்றிப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதற்கமைய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை பெற்றது.

சென்னை அணியை பொறுத்தவரை, அதிகபட்சமாக ஜடேஜா(Ravindra Jadeja) 43 ஓட்டங்களை பெற்றார்.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் சஹார்(Rahul Chahar), ஹர்ஷல் பட்டேல்(Harshal Patel )தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

 

அதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங்(Prabhsimran Singh) 30 ஓட்டங்களை பெற்றார்.

சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே(Tushar Deshpande), சிமர்ஜீத் சிங்(Simarjeet Singh) தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக ஜடேஜா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற தோனியின் சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி(Dhoni) 15 முறை ஆட்டநாயகன் விருதையும் சுரேஸ் ரெய்னா(Suresh Raina )  12 முறை ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளதோடு, ருதுராஜ்(Ruturaj Gaikwad) 11 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை