வங்காள விரிகுடாவில் நிலவிய ரீமல் புயல்: தமிழகத்துக்கு வெளியான எச்சரிக்கை !

user 27-May-2024 இலங்கை 12 Views

வங்காள விரிகுடாவில் நிலவிய ரீமல் தீவிர புயல் பங்களாதேஷை (Bangladesh) நோக்கி சென்றுள்ளதால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (27) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வெப்பநிலையைானது, 86 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அண்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இந்த நிலையில், கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை