“அம்மாவுக்கு பிடித்த இடம்” - சென்னையில் நடிகை ஜான்வி கபூர் நெகிழ்ச்சி

user 28-May-2024 பொழுதுபோக்கு

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலுக்கு இன்று வருகை தந்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “முதன்முறையாக முப்பாத்தம்மன் கோயிலுக்கு வந்தேன். சென்னையில் அம்மாவுக்கு மிகவும் பிடித்த இடம் இது” என தெரிவித்துள்ளார். மேலும் கோயில் வாசல் முன்பு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டியைக் காண ஜான்வி கபூர் சென்னை வந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று கோயிலுக்குச் சென்று வழிப்பட்டுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் நடிப்பில் அடுத்ததாக ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் மஹி’ (Mr & Mrs. Mahi) பாலிவுட் படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து அவர் என்டிஆர் உடன் இணைந்து நடிக்கும் ‘தேவரா’ படம் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க உள்ளார்.

முன்னதாக “அம்பேத்கர் - காந்தி இடையிலான உரையாடல்களை நேரில் காண ஆசைப்படுகிறேன். சாதி குறித்த அம்பேத்கரின் பார்வை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது. ஆனால் காந்தியின் நிலைபாடு மாறிக்கொண்டேயிருந்தது” என்று அவர் கூறியிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை