தென் கொரியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் அறிமுகமாகவுள்ள திட்டம்..!

user 03-Apr-2024 இலங்கை 10 Views

தென் கொரிய அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் காற்றுச்சீரமைப்பிகளின் (air conditioners) ஆற்றல் திறன் சோதனைக்கான ஆய்வகம் இலங்கையில் விரைவில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பச்சை வீட்டு வாயு உமிழ்வை குறைக்கும் நோக்கத்திலேயே தென் கொரியா இந்த ஆய்வகத்தை நிறுவ உதவுவதற்கு முன்வந்துள்ளது, அதன்படி இந்த திட்டத்திற்கு கொரியா எரிசக்தி ஏஜென்சி மூலம் நிதியளிக்கப்படுகிறது.

மேலும் இந்தத் திட்டத்தில், ஆய்வகத்தை நிறுவுதல் மற்றும் தேவையான மனிதவள பயிற்சி ஆகியவற்றை இந்த ஆண்டிற்குள் (2024) நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தென்கொரிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கையொப்பமிடவுள்ள குறிப்பாணை மற்றும் பரிந்துரைகளும் வெளியிடப்படவுள்ளது.

 

இதற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பான உடன்படிக்கை ஒன்றும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இந்த உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரிந்துரைகளில் கைச்சாத்திடுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த வாரம் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை