மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்!

user 13-Aug-2024 இலங்கை 6 Views

பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புரிந்துணர்வு உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளார்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் சாசனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டது

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் எம்.உதயகுமார உள்ளிட்ட பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில்” நாம் மலையகமக்களுக்கான சாசனமொன்றை உருவாக்கியுள்ளோம். மலையக மக்களின் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதில் நாம் கையெழுத்திட்டுள்ளோம். மலையக மக்களின் சுகாதாரம் கல்வி பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்களுக்கான சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வகையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது.மலையக மக்களுக்கு தேவையான அனைத்து அபிவிருத்திகளையும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்” இவ்வாறு சஜித்  தெரிவித்துள்ளார்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை