சமூக ஊடக மோசடிகள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

user 24-Jun-2024 உலகம் 20 Views

பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி (SMS) மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு  இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட குறித்த குழு, பல்வேறு வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் அனுப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து பொதுமக்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த குழுவின் கூற்றுப்படி, “குறித்த மோசடிகள் நன்கொடைகள், பணப் பரிசுகள், அதிர்ஷ்டக் குலுக்கல்கள் மற்றும் வேலைக் காப்பீடு போன்றவற்றில்  சட்டபூர்வமான நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி ஈடுபடுகின்றன.

இந்நிலையில், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்கள், சமூக ஊடக தளங்கள், குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தனிநபர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை